Pregnancy Robot
What is this heading ? பல காலமாக நாம்
சிந்திக்கவே கஸ்டப்படும் சில விடயங்கள் அசாதாரணமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதை நாம்
கண்கூடாக பார்த்துக்கொண்டுள்ளோம். AI என்பது இதற்கு
மிக சிறந்த உதாரணம் ஆகும். AI பல காலமாக மிக
அதீத வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கின்றது.நாம் நினைப்பதை விட மிக மிக
அபரீதமான வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கின்றது.இனியும் வளரும்
என்பதில்சந்தேகமே வேண்டாம்.
இதில் Robotics ஆனது நமக்கு பயத்தை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. பல
அறிஞர்கள் கூறுவது என்னவென்றால் AI Robotics நமது வேலையை
பறிக்கும், நமது அடையாளத்தையும் பறிக்கும் என்பதாகும்.
Table Of Contents
- what is this heading
- மாற்றங்கள் தான் இவ்வுலகில் மாறாதது.
- 100% Accurate Human
- Pros and Cons?
what is this heading
இவற்றையெல்லாம் நாம்
ஆங்கிலப்படங்களில் தான் பார்த்து வியந்துள்ளோம். உண்மையில் நடக்கும் போது அப்படியே
உடம்பெல்லாம் ஆடிப்போகின்றது. இறைவனின் படைப்பிற்கு அப்பால் இன்னும் என்னன்னவோ
எல்லாம் நடந்து கொண்டுதான் உள்ளது. அடக்கடவுளே என்று சொல்லக்கூட முடியாத சூழ்நலையில்
பலர் யோசித்துக்கொண்டுதான் உள்ளார்கள்.
2004 ஆம் ஆண்டு வெளியான i-robot படமானது நல்ல
திரைக்கதையமைப்பைக் கொண்ட சினிமாவாகும். அது 2035 ஆம் ஆண்டு நடக்கும் படி திரைக்கதை எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் அவையனைத்தும் இப்போதே 2024 இல் நடக்கும்
போது வியப்பாக உள்ளது என்று சொல்ல முடியாவிட்டாலும் கிட்டத்தட்ட எதிர்பார்தவைதான்
நடக்கின்றது.
53 வயதான Elon Musk இந்த பெயரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகப்பணக்கார்களில் ஒருவர். கிட்டத்தட்ட US$247 billion சொத்து
மதிப்புக்களை கொண்டுள்ளவர். தொழிநுட்பம் மற்றும் பல இதர சேவைகளில் கால்பதித்து
சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஒருவர். சாதனை மட்டுமல்ல பணத்தையும்
பெருக்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதர். பல Robotics சாதனங்களை
தயாரித்து விளையாடி வருபவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
மாற்றங்கள் தான் இவ்வுலகில் மாறாதது.
ஏன் இவரைப்பற்றி
கதைக்கவேண்டும். ஜயோ மறந்திட்டமோ என்ன சொல்ல வந்த என்று. ஆ ஆ ஞாபகம் வந்திட்டு. அதாவது தற்பொழுது பிரபல்யமாக வரும் செய்தி என்ன என்றால்.
நீங்கள் வேலைக்குச் செல்லுங்கள் உங்கள் குழந்தையை நாம் சுமக்கின்றோம் 9
மாதங்களுக்கு.
என்னடா சொல்றீங்க என்னடா இது எல்லாம். ஆம் ஆம் உண்மைதாங்க. என்ன கதையென்றால் தாய் தந்தையர் நீங்கள் வந்து உங்கள் விந்தணு மற்றும்
முட்டையை தாருங்கள். பிறகு நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் உங்கள் குழந்தையை 9 மாதங்கள் எனது Robotics சுமக்கும்.
அடக்கருமமே என்ன இழவுடா இது. நினைத்துப்பாருங்கள் என்ன கருமம் எல்லாம் நடக்குது
என்று.
ElonMusk அவரினுடைய Company ஆனது இது
சம்பந்தமாக ஆராய்ச்சிசெய்து கொண்டிருக்கிறார்களாம். ஆராய்ச்சி வெற்றியடைந்தால் பல
தாய்மார்கள் காப்பாற்றப்படுவார்கள் என சொல்கிறார். அதாவது பிள்ளை பிறக்கும்போது
ஏற்படும் மரணத்தை இல்லாமல் செய்யலாம் என்பதாகும்.
100% Accurate Human
எவ்வளவு மாற்றம் வந்தாலும் AI ஐ வைத்து குழந்தை பெறுவது என்பது எல்லாம் Over டா டேய். யோசித்துப்பாருங்கள் 100 வீதம் சரியான மனிதன் உருவானால் அவன் எப்படி வருவான் எப்படி இருப்பான் . குறைந்த 30 வீதத்தில் சரியாக இருந்தாலே அவனுடன் வாழ முடியாது. 100 வீதமும் சரியானவானக இருந்தால் சோலி முடிந்து விடும்.
யோசித்துப்பாருங்கள்
எவ்வளவு மிக அற்புதமான சிந்தனை என்று. ஆனாலும் பிறக்கும் குழந்தை என்ன மன நிலையில்
பிறக்கும் என்றும் தெரியாது . அது ஆரோக்கியமாக இருக்குமா என்றும் தெரியாது. பிறந்த
பின்னர் அது என்ன மனநிலையில்
வளரும் என்றும் தெரியாது.
Pros and Cons?
ஒவ்வொரு
கண்டுபிடிப்பிற்கும் பொதுவான நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. அது எப்படி மாறும்
என்றும் தெரியாது. ஆனாலும் பல மனிதாபிமான நிறுவனங்கள் இதற்கு ஆதரவு தருமா என்பது
கேள்விக்குறியே. ஆனாலும் இந்தச்
செய்திகள் எந்தளவிற்கு உண்மையென்பது இன்னும் சந்தேகமே. அடப்போங்கடா என்ன என்னமோ
சொல்றீங்க.Threads சமூக
வலைத்தளத்தில் கிடைத்த பதிவை வைத்துத்தான் இப்பதிவை தயாரித்துள்ளோம். ஏனென்றால்
சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வெளியாகும் பல செய்திகள் பொய்யானதாகவே இப்பொழுது
இருக்கின்றது.
Elun Mask அவர்களினால் பல வகையான கண்டு பிடிப்புக்கள் அதிகம் உலகத்திற்கு வந்து கொண்டுதான் உள்ளது. அவற்றில் மிக அதிகமானவை வெற்றியளித்துள்ளது சிலவை மிககுறைந்தளவு வெற்றி கிடைத்துள்ளது. இருந்தாலும் சிலவற்றை யூகிக்க முடியாது எதுவும் நடக்கலாம். ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம் எந்தளவு தூரம் சரியாக நடக்கின்றது என்று. இயற்கையை நாம் எதிர்த்தால் பல பிரச்சனைகள் எதிர் நோக்க வேண்டியிருக்கும். இருந்தாலும் சரியான தகவல்களை பெற்றுக் கொள்ள பொறுத்திருந்து பார்ப்போம். எங்கு போகின்றது என்ன நடக்கின்றது என்று. பொறுமையே பெருமை.
எமது பதிவுகளை தொடர்ந்து பார்வையிடுங்கள் அறியாதவற்றை அறிந்து கொள்ளுங்கள். தெரிந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அப்படியே எங்களது சமூக வலைப்பக்கத்தையும் பார்வையிட்டு எங்களது வளர்ச்சிக்கு உதவி செய்திடுங்கள்.
வாசித்தமைக்கு நன்றி.
இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள்
வெளிவரும். நன்றி மீண்டும் வருக.