Type Here to Get Search Results !

Sri Lanka Police traffic App

Sri Lanka Police traffic App

இலங்கையில் அண்மைக்காலங்களில் பல விபத்துக்கள் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. அவையனைத்தும் தற்செயலாக இடம்பெறவில்லை எனவும் சிலவை சாரதிகளின் கவனமின்மையாலும் ஏற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. இது சம்பந்தமாக நாம் வருத்தப்பட மட்டுமே முடிந்தது. அவற்றையெல்லாம் மாற்றக்கூடியதாக தற்பொழுது பொலிசாரினால் ஒரு Sri Lanka Police traffic App வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பிரதிபலிப்பதற்காகவே இந்த பதிவு.
Sri Lanka Police traffic App


Status of App

நாம் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. அதாவது Sri Lanka Police traffic App . இது தற்பொழுது முற்று முழுதாக முடியவில்லை  beta and under development வெளியீடாகவே உள்ளது. Test இல் உள்ளதால் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவானவர்கள் மாத்திரம் Download பண்ணுவதற்காக சில தற்காலிக Setting செய்யப்பட்டுள்ளது.

Can i Install Android or iPhone?

அத்துடன் இது APK file ஆக Download பண்ண முடியும் .அத்துடன் பொலிசார் தெரிவித்ததாவது இன்னும் சில நாட்களில் Play Store and APP Store போன்றவற்றிலும் Download பண்ணி  Install செய்து பாவிக்க முடியும் என்பதாகும்.

link

கீழே குறிப்பிடப்படும் இணையத்தளத்தில்  APK File Download செய்து கொள்ளலாம்.
https://srilanka-etraffic-app.vercel.app/

இதை நாம் Google Account மூலமும் Sign in செய்து கொள்ளலாம்.இங்கு 6 Step களில் இந்த App களை நிறுவி பாவித்துக் கொள்ளலாம். 
  1. Download Install
  2. Create Account and Login
  3. Camera or Video :- இங்கு Camera அல்லது Video என்பதை Click செய்து நமக்கு என்ன வேண்டுமோ அதை தெரிவு செய்யலாம்
  4. Take Photo / Video :- மீறப்படும் சட்டத்தை  Photoஅல்லது  Video எடுக்கவும்.
  5. Give the description about the violation :-  அத்துடன் அந்த Violation பற்றி விபரிக்கவும்.
  6. இறுதியாக அந்த Violation ஐ பதிவேற்றம் செய்யவும்.

முக்கிய குறிப்பு :-

 ஏதாவது விதிமுறை மீறல் சாரதிகளினல் ஏற்படுமாயின் அவற்றை நாம் நேரடியாக பொலிசாருக்கு அறிவிக்கலாம். அந்த சாரதிகளுக்குரிய தண்டனை அல்லது எச்சரிக்கை வழங்கப்படும். இவையனைத்தும் பொலிஸ் தலைமையகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு தேவையான பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிசாருக்கு தேவையான நடவடிக்கைக்காக அனுப்பப்படும். 
இதனால் ஏற்படும் விபத்துக்களை இல்லாதொழிக்கலாம் இல்லாவிடில் மிகக்குறந்தளவு கணிசமாக குறைக்கலாம்.

இவையனைத்தும் வெற்றியளித்தால் இன்னும் நாம் Crystal Clean Sri Lanka ஆக மாற்றம் பெறலாம். நம்புவோம் , நம்பிக்கைதானே வாழ்க்கை. எமது உயிரையும் காப்போம் பிறரையும் பாதுகாப்போம். குறைந்தளவு காலம் வாழப்போகின்றோம் அதற்குள் நல்லாக வாழ்ந்திடுவோம்.

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது. கொடிது , கொடிது , இயற்கையாய் இழப்பது கொடிது. *-ஓளவையார்-*

Sri Lanka Police traffic App சம்பந்தமான பதிவை வாசித்தமைக்கு நன்றி. இது போன்ற நல்ல பதிவுகள் இன்னும் வரும் என்பதையும் தெரிவிக்கின்றோம். 
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இதை பகிருங்கள். 
நன்றி

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad