PHP Tutorial in Tamil -01
தற்போதைய உலகில் நமக்குத்தேவையான சில வேலைகளை நாமே உருவாக்கி கொள்ள வேண்டிய தேவைப்பாடு நமக்கு உள்ளது. So அதற்கு இன்றியமையாதது ஒரு இணையத்தளத்தை உருவாக்குவதும் .
ஏனென்றால் இவ்வாறு இணையத்தளம் உருவாக்கி கூட பலர் பணம் சம்பாதித்து கொண்டுள்ளார்கள். Actually தங்களது பொருட்களை காட்சிப்பத்தி விற்பனை செய்தல் கூட ஒரு வகையான வியாபாரம் தான்.So இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு PHP ஐ ப்பயன்படுத்தி எவ்வாறு Server Side இணையத்தளங்களை உருவாக்குவது என்பது பற்றியதுதான்.
Web Application துறையில் உள்ளவர்களுக்கு இது பற்றி அதிகம் தெரிந்திருக்கும். மாணவர்கள் மற்றும் கற்க நினைப்பவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருப்பதற்குதான் இந்த Php Tutorial in Tamil தொடரை உருவாக்கியுள்ளோம்.
What is PHP?
உண்மையை சொன்னால் இது ஒரு Open Source Language ஆகும். இதற்காக நாம் பணம் செலவழிக்க தேவையில்லை இது முற்றிலும் இலவசமானது. இதுவும் முற்றிலுமாக Object Oriented Scripting Language கொண்டு இயங்கும் ஒரு கணணி மொழியாகும்.
அத்துடன் இதை உருவாக்க ஒரு Server தேவைப்படும். ஏனென்றால் அது Sever இலே தான் இயங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
தேவையானவை
First of All நமக்கு ஒரு Serverவேண்டும். அத்துடன் Database வேண்டும் அவற்றுடன் இந்த PHP ம் வேண்டும்.
ஆரம்ப காலங்களில் இவையனைத்தும் தனித்தனியாக Computer ல் நிறுவப்பட்டு தான் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய முன்னேற்றமான தொழிநுட்பத்தில் இவையனைத்தையும் ஒன்று சேர இணைத்து பல நிறுவனங்கள் Bundle ஆக மாற்றம் செய்து தந்துள்ளர்கள். அதுவும் இலவசம் தான்.
இதற்காக நாம் பயன்படுத்தும் Software Bundle இன் பெயர்கள் வருமாறு.
- WAMPP
- LAMPP
- MAMPP
- XAMPP
மேலே உள்ள படமானது எவ்வாறு இந்த பெயர்கள் பங்கிடப்படுகின்றது என்பதை நமக்கு காட்டுகின்றது. அதே போல் மற்றவையும் காட்சிப்படுத்தப்படும்.
List of Bundles
உதாரணமாக :
01.WAMPP :- M- MS Windows OS , A- Apache Server ,M- Maria DB or My SQL , P-PHP or Pearl
02.MAMPP :- M- Mac OS , A- Apache Server ,M- Maria DB or My SQL , P-PHP or Pearl
03.LAMPP :- L- Linux OS, A- Apache Server ,M- Maria DB or My SQL , P-PHP or Pearl
04.XAMPP :- X - Cross Platform , A- Apache Server ,M- Maria DB or My SQL , P-PHP or Pearl
எமது தேவைக்காக நாம் Xampp Server ஐ தான் இங்கு பயன் படுத்தப் போகின்றோம்.
அடுத்த பதிவில் எப்படி XAMPP Server ஐ எமது கணணியில் Install செய்வது என்பது பற்றி பார்ப்போம். 😊😊😊
இந்த பதிவை வாசித்தமைக்கு நன்றி மேலும் தொடரும்.