Type Here to Get Search Results !

will My Mobile be disconnected?

 Will My Mobile be disconnected?

கடந்த வாரமாக ஒரு பிரதானமான செய்தி ஒன்று இலங்கை மக்களிடம் ஓடிக்கொண்டிருக்கின்றது. என்னடா அது என்றுதானே கேட்கிறீர்கள். அதாவது எனது Mobile Phone னும் வேலை செய்யாமல் போய்விடுமா என்பதுதான் ( will  My Mobile be disconnected?). 

ஆம் சில நாட்களுக்கு முன்பு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு (TRCL) , Telecommunication Regulatory commission of Sri Lanka அதுதான் அதனால் ஒரு முக்கிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. TRCL இல் உங்கள் Mobile இன் IMEI (International Mobile Equipment identity ) நம்பர் பதியப்படவில்லையாயின் இனிவரும் காலங்களில் அவ்வகையான பதியப்படாத அனைத்து Mobile களும் வேலைசெய்யாமல் போய்விடும் என்பதாகும்.
Table of Contents
will  My Mobile be disconnected?


What Work?

இங்கு வேலை செய்யாமல் போய்விடும் என்பதன் கருத்து உங்கள் Mobile ற்கு இலங்கையில் உள்ள GSM Service Provider (Dialog, Airtel, Mobitel ,Hutch ...etc ) களின்  SIM போட்டாலும் Signal வராது அப்படியானால் ஒரு வேலையும் செய்ய முடியாதே. அதனால்தான் எனது Mobile ம் வேலை செய்யாமல் போய்விடுமா என்று கேட்கின்றார்கள். பெரும்பாலும் வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் Mobile  கள்தான் இதன் மூலம் பாதிக்கப்படபோகின்றது.  

How do i find my Mobile IMEI ?

அது சரி எப்படி எனது Mobile இன் IMEI  நம்பரை கண்டு பிடிப்பது அதுதானே உங்கள் அடுத்த கேள்வி . சரிதான் வாருங்கள் பார்ப்போம். 

முதலில் உங்கள் Mobile இல் Call (தொடர்பு)  எடுப்பதற்கான பகுதிக்கு செல்லுங்கள். அங்கே  கீழ்வரும் இலக்கத்தை Type செய்து Call ஐ க் கொடுங்கள். அப்போது உங்கள் Mobile Number ற்குரிய IMEI நம்பர் கிடைக்கும். அவ்வளவுதான்.

*#06#

பெரும்பாலும் IMEI ஆனது 15  Digit  ஐ கொண்டிருக்கும்.

will  My Mobile be disconnected?

What is the next step?
So உங்கள் Mobile  இல் SMS  ற்கு சென்று உங்கள் IMEI ஐ  1909 ற்கு அனுப்புங்கள். அப்போது உங்கள் Mobile பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என உங்களுக்கு SMS வரும். ஆகவே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
Sms From trcl

IMEI  xxxxxxxxxxxxxxx (1909) 

முதலில் IMEI என Type செய்யுங்கள்  ஒரு இடைவெளி விட்டு உங்களது IMEI ஐ Type  செய்து அதை 1909 ற்கு அனுப்பவும்.
will  My Mobile be disconnected?

Important Update !

அத்துடன் முக்கிய குறிப்பு என்வென்றால் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து Mobile  களும் அதன் வேலையை இப்போது போல் செய்து கொண்டே இருக்கும் . நீங்கள் பயப்பட தேவையில்லை. வீண் புரளிகளையும் நம்பாதீர்கள். 

(கவனம் :- இதைக் காரணமாக வைத்துக் கொண்டு ஏமாற்றுக்காரர்கள் ஏதாவது புது ஏமாற்று வேலை செய்ய திட்டம் தீட்டிக் கொண்டிருப்பார்கள். So Be Careful)

But 28.01.2025 ம் திகதிக்குப்பிறகு வாங்கும்  Mobile அனைத்தும் TRCL இனுடன்  பதிவு செய்யப்படாமல் விட்டால் எந்தவொரு GSM Network Providers ( Dialog, Airtel, Mobitel , Hutch ... etc) இனுடைய SIM போட்டாலும் Signal or Coverage கிடைக்காது. 

So 29.01.2025 முதல் வாங்கும் அனைத்து Mobile களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என பரீட்சித்து வாங்குங்கள். அது உங்களது கட்டாய கடமையாகும் . உங்களது மட்டுமல்ல கடைக்காரர்களும் அது சம்பந்தமாக உங்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். அதற்காக  Mobile விற்கும்  Vendor  களும் அந்த Mobile Box உடன்  TRCL Approved என ஒரு Sticker  ஐ ஒட்டிவைத்திருப்பார்கள். 

As Usual, Take care!
Sticker கள் திருட்டுத்தனமாகவும் இருக்கும் ஆகவே தெளிவாக நாம் மேல் சொன்ன முறையை பயன்படுத்தி உறுதி செய்த பின்பு வாங்கிக் கொள்ளவும்.

ஒரே வகையான Mobile  வெவ்வேறு கடைகளில் வேறு பட்ட விலைகள் போவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும். ஏனென்றால் TRCL இனுடன் பதிவு செய்யப்படாத  Mobile களுக்கு வரி செலுத்த தேவையில்லை அதனால் அதன் விலையும் குறைவு . But TRCL இன் அனுமதியுடன் இறக்குமதி செய்வதாயின் வரியும் உண்டு இதற்கேற்றாற்போல் விலையும் மாறுபடும். (Clean Sri Lanka)


More Details :- https://www.trc.gov.lk/newsdetails_e.php?nid=74

இன்னும் தெளிவு தேவையானால் மேலுள்ள Link ஐ Browser இல் Copy , Paste செய்து வாசித்துக் கொள்ளவும்.

 Will  My Mobile be disconnected? பற்றிய பதிவை வாசித்தமைக்கு நன்றி இது போன்ற சிறந்த தகவல்களைப் பெற எமது பக்கத்தை தொடர்ந்து வாசிக்கவும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad