Type Here to Get Search Results !

KOKO App: The Future of E commerce

KOKO App: The Future of E commerce 

வணக்கம் அன்பு உள்ளங்களே இன்று எமது பதிவு ஒரு App சம்பந்தமானது. அதாவது இன்றைய இணைய உலகில் E Commerce என்பது முக்கியமாக ஒரு அங்கமாக மாறிவிட்டது. நாம் எமது நேரத்தையும் காலத்தையும் மிச்சப்படுத்தி எமக்கு தேவையான அனைத்தையும் வீட்டிலிருந்தே வாங்கும் நிலைக்கு முன்னேறிவிட்டோம் (This is The Future of E commerce) வீடு என்றால் வீடு மட்டும் அல்ல து எமது வியாபாரத்தலமாக இருக்கலாம் வேலை செய்யும் நிறுவனமாக இருக்கலாம் உலகத்தில் எங்கயாவது இருக்கலாம் ஆனால் எமக்கு என்ன வேண்டுமோ அது தேவையான போது தேவையான இடத்தில் கிடைக்கும். அதுதான் தொழிநுட்ப வளர்ச்சி எனப்படும்.  The Future of E commerce


Payment Methods

So நாம் நமது தலைப்பிற்கு வருவோம். நாம் என்னதான் பொருட்கள் சேவைகளை வாங்கினாலும் அவை அனைத்திற்கும் நாம் தான் பணம் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்காம பக்கத்து வீட்டுக் காரனா கொடுப்பான் இதுதானே உங்க கேள்வி. என்னவாக இருந்தாலும் பணம் இன்றியமையாதக ஒன்றாக மாறிவிடுகின்றது. சரி பொருட்களை வாங்கினால் பணம் செலுத்த பல வழிகள் உள்ளன அவற்றில் 

  1. Credit Card
  2. Cash on Delivery (COD)

என்பவை மிக இன்றியமையாதவை ஆகும்.

Credit Card

இங்கே கடன் அட்டை வைத்திருப்பவர்கள் தாங்கள் வாங்கிய பொருட்களுக்கு கடன் அட்டை மூலமாக 6 மாதம்,  12 மாதம் அல்லது வருடக் கணக்கில் செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவார்கள். இவையற்ற நாம் என்ன செய்யலாம் அதற்காக வெளி நாடுகளில் பல வகையான நிறுவனங்கள் இருந்தாலும் இலங்கையை பொறுத்த வரையில் சில விரல் விட்டு எண்ணக் கூடிய சில நிறுவனங்களே உண்டு. 

KOKO App: The Future of E commerce


Buy now pay later with Koko

அவற்றில் மிக பிரபல்யமான ஒரு Company பற்றி தான் நாம் பார்க்கப்போகின்றோம். சுத்தி வளைக்காம சொல்லுங்கோ இதுதானே இப்ப மண்டையில் ஓடுது. சரி சரி. அதன் பெயர் KOKO என்பதாகும்.

இவர்களது தாரக மந்திரம் Buy Now Pay Later என்பதாகும் பாருங்கள் எவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்று. அதவாது நாம் ஏதாவது பொருளை Online வாங்கினால் ( நேரடியாக கடைக்கு சென்று வாங்கும் பொருட்களுக்கும் இது பொருந்தும்)  அந்த பொருளின் விலையை 3 ஆகப் பிரிப்பார்கள் பின்பு அதன் முதல் பெறுமதியை அப்பொதே  செலுத்தி விட்டு நாம் பொருளை கொண்டு வர வேண்டியதுதான் மிகுதியை வரும் இரண்டு தவணைகளில் செலுத்தினால் போதும். 

Eg :- Laptop Wire less Mouse :- 900.00 (Total Price) 

        =900 /3 

        = 300

16/1/2025 அன்று பொருளை வாங்குகின்றோம்.அதே நாளில் 300 ரூபாவையும் அடுத்த மாதம் அதாவது 02/16/2025 அன்று அடுத்த  300 ரூபாவையும் அதற்கு அடுத்த மாதம்  03/16/2025 மிகுதி 300 ரூபாவையும் செலுத்தினால் சரி.


சிலவேளைகளில் Delivery Charge இம் இதனுடன் சேர்த்து அறவிடப்படும். ஏனெனில் கொழும்பிலுள்ள ஒரு நிறுவனத்துடன் மட்டக்களப்பிலுள்ள ஒருவர் பொருளை வாங்கினால் Courier Charge தொகையும் சேர்த்து அறவிடப்படும். இதுவம் 3 ஆக பிரிபடும் அப்பப்பா என்ன இனிமை.

பொருளின் விலை ஆகும் 900.00. 

Courier செலவு ஆகும் 300.00 

 இப்போ மொத்தம் v900+300 = 1200 ஆகும்

 அதை 3 பிரித்தால் 400 ரூபா விகிதம் February , March  மாதங்களில் 16 ம் திகதி இதே தொகை அறவிடப்படும்.


Steps 

அதற்கு முதலாக நீங்கள் அந்த App ஐ Download  செய்து கொள்ளுங்கள் ( Android & Ios ) . பிறகு கணக்கை திறந்து கொள்ளுங்கள் (உங்கள் கையடக்க தொலைபேசியை எண்ணைக் கொடுத்துகணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்.) After சில தகவல்களை உங்களிடம் Upload செய்ய சொல்வார்கள் இறுதியாக நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வரும் (Video Call) அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்கினால் உங்கள்கணக்கு Activeஆகிவிடும். 

KOKO App installation


(எல்லாவற்றையும் விட க்கியமான குறிப்பு உங்களிடம் இருக்கும் Credit / Debit Card ஒன்றை இந்த  APPஉடன் நீங்கள் இணைத்து வைத்திருக்க வேண்டும் அது உங்கள் பணமிகுதி உள்ள Bank இனுடைய Card ஆக இருக்க வேண்டும். இங்கு அவதானமாக இருங்கள் ஏனெனில் உங்கள் வங்கி அட்டையை கொடுப்பதால் சில சிக்கல்களும் உண்டு அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. சிலர் இதற்காகவே புதிதாக வங்கி கணக்கை திறந்து அதனுடைய  Card ஐ இதற்கு பயன்படுத்துவார்கள். எப்போ பொருள் வாங்க வேண்டுமோ அச்சந்தர்பத்தில் மாத்திரம் பணத்தை செலுத்துவார்கள் ) 

Register with mobile


பிறகு என்ன உள்ளே சென்று பாருங்கள் எந்த எந்த நிறுவனங்கள் அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்றும். உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ந்திடுங்கள் . 

Important Update

So முக்கிய குறிப்பு கட்ட வேண்டிய தவணையில் நீங்கள் பணம் செலுத்த தவறினால்  தண்டப்பணமும் சேர்த்து கட்ட வேண்டி வரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இவர்களின்முன்னோடி Daraz ஆகும் 2020 ஆம் ஆண்டளவில் இவர்கள் இதை உருவாக்கியிருந்தார்கள்.


தனிப்பட்ட தகவல்கள் and வங்கிக் கணக்குகளை நீங்கள் பதிவேற்றம் செய்ய விருப்பதால் அவதானமாக செயல்படவும்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad