Type Here to Get Search Results !

Gemini Ai Tricks and Tips

 What is Gemini?

Gemini AI இந்த பெயரைக் கேட்டால் நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது மிகப்பிரபல்யமான இந்திய திரைப்பட நடிகர். ஆனாலும் அவர் நமக்கு தேவையில்லை அவரை விடுவோம்.

இன்று நாம் பார்க்க இருப்பது Google நிறுவனத்தின் மிகப்பிரபல்யமான AI  ஜ Gemini ப் பற்றித்தான்.மிக பெரிய மாற்றங்களை எதிர் நோக்கியுள்ள தொழில்நுட்பப்புரட்சியில் AI இன் பங்கு மிக அளப்பரியது எனலாம். எங்கு திரும்பினாலும் AI தான். 

இந்த AI களை வைத்து எல்லா வகையான வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். நமக்கு தெரிந்திருக்கும் இறுதியாக வந்த தமிழ் திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இறந்து போன தனது தங்கையின் குரலை பயன்படுத்தி புதிய பாடலை உருவாக்கியிருந்தார்.  இதே போல் பலர் செய்துள்ளார்கள். தற்பொழுது எமக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் இந்த AI களைப்பயன்படுத்தி செய்யக் கூடியதாக உள்ளது. 

அனைத்து விதமான பல்லூடகங்களையும் (Image, Text, Voice and Video) புரிந்து கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய தொழிநுட்ப புரட்சியாகும்.Google இன் முதலாவது பதிப்பான Gemini 1ஆனது உலகின் மிகப்பிரபலமான Programming Language (Python, Java, C++, and Go) களை புரிந்து கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. 

Gemini Ai Tricks and Tips

இதே போல் AI ஜ பயன்படுத்தி AI Generated Image ஒன்றை எப்படி உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.முதலில் Google Gemini கணக்கிற்குள் உள்நுழைந்து Image உருவாக்க  அதில் என்ன கொடுக்க வேண்டும் என்பதை நாம் தெரிவிக்க வேண்டும்.

இங்கு நாம் , ஒரு அழகான நாய்க்குட்டி மேசையில் உள்ள Laptop ஐ பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் அத்துடன் மேசையில் ஒரு பதாதை உள்ளது அதில் எமது தளத்தின் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதை நான்கேட்டிருந்தேன். இப்படி வருகின்றது என்று பார்ப்போம். .

Gemini Ai Image Creation Text

"A cute dog sitting in front of a laptop on a desk. The dog is looking at the screen with curiosity. On its lap, there is a sticky note with the word 'tamiltechtalkwithshaa' written in big letters. The setting is cozy, with a warm light and a few books in the background." create it".


Finally நம்பமுடிகின்றதா பாருங்கள் Image எப்படி வந்துள்ளது என்பதை. So நீங்களும் சில முக்கியமான வசனங்களை மாற்றி உங்களுக்கு தேவையான Image உருவாக்கிக்கொள்ளலாம். உண்மையை சொல்லப் போனால் இவை Copy Right Issues  இல்லாத Image ஆகும் ஏன் என்றால்  Image எமக்காககத்தான் இவை Gemini Ai  உருவாக்கப்படுகின்றன. So  இவற்றிற்கு Intellectual Problem வரவே வராது அதைத்தான் சென்னோம்.Intellectual என்றால் என்ன என்று இன்னுமொரு பதிவில் உங்களுக்கு தருகின்றோம்.

 Gemini Ai Tricks and Tips பற்றிய பதிவை வாசித்தமைக்கு நன்றி. இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும். நன்றி மீண்டும் வருக

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad