நீங்கள் ஒரு சிறந்த Developer ?
நீங்கள் ஒரு Developer ஆக மாற
ஆசைப்படின் சில அடிப்படை தககைமைகளை
வளர்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படைத் தகமை மட்டுமல்ல அது தான்
அடிப்படையான தேவையும் கூட. General Tips For Developers(Beginners) எப்படியாயினும் நாம் இந்த தகைமைகளை வளர்த்தால் தான்
எம்மால் ஒரு வேலையை தேடிக்கொள்ள முடியும். அதன் பின்னரும் அந்த வேலையை தக்க
வைத்துக் கொள்ளவும் இவை
அவசியமாகின்றது. அதற்காக சில அன்றாட கடமைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
General Tips For Developers(Beginners)
ஒவ்வொரு நாளும் நாம் Code ஐ பயிற்சி பண்ண வேண்டும்.
அப்படி செய்தால் தான் நமது நினைவுத்திறன் அதிகரிக்கும். General Tips For Developers(Beginners) பயிற்சி
இல்லாவிடின் மறந்து போவதற்கு மிக அதிகமாக சந்தர்ப்பங்கள் உள்ளது. Code ஐ எப்போதும் நாம் பாடமாக்கும் முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் பாடமாக்குவது என்பது கஸ்டமான செயலாக மாறுவதோடு உங்களுக்கு Code மேல் ஒரு வித வெறுப்புணர்வு தோன்றுவதற்கு காரணமாக அமைந்து
விடும். அதாவது வேலில போன ஓணான வேட்டில விட்ட கதையாகப்
போய்விடும்.
ஒரு பெரிய Problem எடுத்து அதை சிறிய சிறிய Problem
ஆக மாற்றம்
செய்து கொள்ள வேண்டும். பெரிய வேலையாக இருந்தால் நமக்கு ஒரு வித பயம் மற்றும்
தயக்கம் ஏற்படும். அதற்காக பெரிய Problem களை சிறிய
சிறியதாக உடைத்து Code
பண்ணத்தொடங்கினால். வேலையை இலகுவாகவும் வேகமாகவும் பிழையின்றி துல்லியமாகவும்
முடிக்கலாம்.
எப்பவும் தெரியாததை தெரிந்து கொள்ள ஆர்வமாயிருங்கள். அதைத்தான் பசித்திருங்கள் என்பார்கள். சாப்பாடு பசித்தல் இல்லை அறிவுப் பசி. கற்றுக்கொள்ள ஆர்வமாயிருக்க வேண்டும் , அது சிறியவர் பெரியவர் யாராயிருந்தாலும் பராவில்லை. கற்றுக் கொள்ள வயதும் தடையில்லை யாரிடம் கற்றுக் கொள்கின்றோம் என்பதை பற்றியும் கவலை கொள்ளாதிருங்கள். தெளிவு தேவை அதை தருவது யாராயிருந்தாலும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாயிருங்கள்.
General Tips For Developers(Beginners)
Code Develop செய்த பின்னர்
எப்பவும் பரிசோதனைக்குள்ளாக்குங்கள் உங்கள் Code. ஏனென்றால்
பிழையற்ற Code தான் நம்மை சரியான Developer ஆக மாற்றும். ஆகவே
எப்போதும் சோதனை செய்யுங்கள்.
அடுத்தாதாக உங்களது Code ஐ Comment செய்து Develop பண்ணுங்கள். ஏனென்றால் நமக்கு மறதி அதிகம் எதற்கு என் செய்துள்ளோம் என்பது தெரியாமலே போய்விடும். அதற்காகத்தான சிறந்த Developer ஆக மாற வேண்டும் என்றால் Comment தான் முக்கியம். நாம் என்ன செய்துள்ளோம் என்பதை எமக்கும் ஞாபகமூட்டுவது இந்த Comment தான். நாம் ஒரு நிறுவனத்தில் இல்லாவிட்டாலும் எமக்கு பின்னால் அங்கு பணிபுரிய வருபவர் என்ன செய்ய வேண்டும் என்பதை Comment தெளிவு படுத்தும். ஏனென்றால் எவ்வளவு பெரிய Developer ஆக இருந்தாலும் நிறுவனத்திற்கு புதிதாக வரும் போது அந்த சூழ்நிலையை அவருக்கு தெளிவு படுத்துவதற்கு உதவும்.
அடுத்தாக எப்போதும் Update ஆக இருக்க வேண்டும். அதாவது தொழிநுட்பம் எப்படி மாறுகின்றது
. நாம் பாவிக்கும் Language இல் ஏதேனும்
மாற்றம் வந்துள்ளதா என்பதை எல்லாம் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் நிறுவனங்கள் எல்லாம் புதிதாக ஏதேனும்
மேம்பாடுகள் வந்தால் அதற்கு ஏற்றாற்போல் மாறிவிடும். வேலையை இலகுவாகவும்
பாதுகாப்பாகவும் முடிப்பதற்கு இவை இன்றியமையாதவை. ஆகவே அந்த மாற்றத்தை நாம்
ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிடின் வேலையை விட்டு வெளியேறே வேண்டும் அது சாத்தியமே இல்லாத ஒன்று ஆகவே எப்போதும் Update ஆகவே இருங்கள்.
BCS, ACM, IEEE போன்ற அனைத்து Professional Bodies இதையே தான் சொல்கின்றார்கள். இவை பற்றி எதிர் வரும் பதிவுகளில் பார்ப்போம்.
வாசித்தமைக்கு நன்றி. இன்னும் பல சுவாசியமான முக்கியமான மற்றும் தொழிநுட்பம் சார்ந்த பதிவுகள் வெளிவரும். நன்றி மீண்டும் வருக.