Prank With Your Folder !!
வணக்கம் இன்றைய தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு தெரிந்திருக்கும் நாம் எது பற்றி கதைக்க போகின்றோம். என்று.Prank With Your Folder !!
ஒவ்வொரு கணணியிலும் Folder Structure கட்டமைப்பு ஆனது மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் எமது Data வை இலகுவாகவும் வேகமாகவும் தேடி எடுத்துக் கொள்ளலாம். அது நமக்கும் நல்லது எமது கணிணிக்கும் அத்தியாவசியமானது. Folder அமைப்பானது ஒழுங்கமைக்கப்படாமல் அங்கும் இங்கும் இருந்தால் அவசரத்திற்கு எமது வேலையை இலகுவாக செய்து முடிக்காமலே போய்விடக்கூடும்.
Prank With Your Folder !!
தமழில் அழகான பழமொழி ஒன்று உண்டு. அவசரத்திற்கு அண்டாவிற்குள்ளே கை போகாதாம் என்று. அதே போலதான் நமக்கும் நடக்கும். நமது வேலையை இலகுவாகவும் வினைத்திறனுடனும் வேகமாகவும் செய்வதற்குத்தான் இந்த கணிணிகள் உருவாக்கப்பட்டன. அதை நாம் சரியாக பயன்படுத்தாவிடின் யோசித்துப்பாருங்கள் நிலைமையை. அதே அதே தான். இவற்றை பார்த்தால் இந்த தொழிநுட்ப வசதி வராமலே போயிருக்கலாம் போல் இருக்கின்றது.
ஆகவே Folder முகாமைத்துவம் அத்தியாவசியமானது. அப்பொழுதுதான் உங்கள்Folder எங்கே உள்ளது என உங்களால் இலகுவாக அடையாளம் காண முடிவதோடு உங்கள் நேரத்தையும் மிச்ச படுத்தலாம்.
Prank பண்ணுறன் என்று கூட்டி வந்திட்டு இப்படி அறுக்கிறோமோ என்று தோன்றுகின்றதா. ஹிஹி விடுங்கப்பா அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா. சரி விடயத்திற்கு வருவோம். என்ன என்றால் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் ஒரு Folder ற்கு Name போடாமல் அதற்கு Folder Icon இனும் இல்லாமல் அது இருக்கும் இடமும் இல்லாமல் செய்து எப்படி என்பதே ஆகும். போதும் போதும் ரொம்ப லென்தியாக போகின்றது. Matter க்கு வாடா ....
How do i Create the Folder
இங்கு நாம் Folder ஐ உருவாக்க எமது Windows OS இன் Desktop ஐ தேர்ந்து எடுத்துள்ளோம். நீங்கள் உங்களுக்கு வேண்டிய Location ஐ தேர்ந்து எடுத்து பாவித்துப்பாருங்கள். இந்த Method ஆனது எங்கவும் வேலை செய்யும் என்பது எமது தாழ்மையான கருத்து.
So முதலில் Desktop இல் ஒரு ஐ உருவாக்கிக்கொள்ளுங்கள். (Right click --->New ----> Folder).
(folder right click -----> rename or else Press F2 Key) பிறகு அதனது பெயரை மாற்றுவதற்காக Rename Option ஐ தெரிவு செய்யுங்கள்.
நாம் பெயர் இல்லாமல் தான் இந்த Folder ஐ உருவக்கப்போகின்றோம். உண்மையை சொல்லப்போனால் Windows OS ஆனது பெயர் இல்லாமல் ஒரு Folder ஐ உருவாக்க விடாது என்பதை நினைவிpல் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே நாம் சொல்லும் Method ஐ Follow பண்ணுங்கள்.
Make it Simple
Rename செய்த பின் நமது Keyboard இல் ALT key ஐ அழுத்தி பிடித்துக் கொண்டே 255 என்ற எண்ணையும் Type பண்ணுங்கள் . அவ்வளவுதான் முடிந்தது கதை . இப்பொழுது பாருங்கள் பெயரே இல்லாமல் Folder ஒன்று இருப்பதை.
பிறகு Folder இருப்பதை தடயமே தெரியாமல் மாற்றுவதற்குரிய செயல்முறையை செய்ய வேண்டும்.
நாம் உருவாக்கிய Folder ஐ Right Click செய்து அதன் Properties ஐ தெரிவு செய்க. அங்கு Customize எனும் Option Tab இருப்பதை காணலாம் அதிலே Folder Icon என்பதை செய்து அங்கு நமக்கு தேவையான Icon ஐ தெரிவு செய்தால் சரி வேலை முடிந்து விடும்.