VLC Media Player Subtitles
அனைவருக்கும் வணக்கம் , நாம் எல்லாரும் பல காலமாக பாவித்து கொண்டுதான் இருக்கின்றோம். உண்மையை சொன்னால் அதை இலவசமாகவே பாவித்து கொண்டு தான் இருக்கின்றோம். சரி கதைக்கு வருவோம் .
இந்த மாதம் 7 ம் திகதி முதல் 11 ம் வரை நடை பெற்ற CSE மாநாட்டில் அவர்கள் தாங்கள் என்ன செய்ய போகின்றோம் என்பதை தெளிவாக வெளியிட்டிருந்தார்கள் . இங்கு CSE என்பது என்ன வென்றால் Consumer Electronics Show ஆகும்.
Table of Contents
Contents
- Consumer electronics show (CES 2025)
- What Are they reveals?
- What About the VLC?
- Did You Donate ?
உண்மையை சொன்னால் இது உலகத்தின் தலை சிறந்த ஒரு தொழிநுட்ப நிகழ்வாகும் . உலத்தில் உள்ள அனைத்து தொழிநுட்ப நிறுவனகளும் தங்களது அடுத்த கட்ட செயல்பாடு என்ன என்பதை வெளிக்காட்ட இங்கு கூடுவார்கள் . அதிலே புதிய நிறுவனம் கூட தங்களது கண்டு பிடிப்புக்கள் பற்றி வெளியிடுவார்கள் . ஒவ்வொரு நிறுவனமும் தங்களை நிரூபிக்க சிறந்த ஒரு தளம் ஆகும் .
அப்படி தான் VLC Media Player ஐ நமக்கு வழங்கும் Video Lan என்ற நிறுவனம் அடுத்து நாம் என்ன செய்ய போகின்றோம் என்பதை தெளிவாக வெளிபடுத்தி இருந்தார்கள் .
What Are they reveals?
அதாவது இனி நாம் VLC Media Player பயன்படுத்தி Video பார்க்கும் போது அதனுடைய Subtitles நமது உள்நாட்டு மொழிக்கு ஏற்றாற் போல் மாற்றம் பெறும் என்பதாகும். இனி நாம் எந்த படத்தையும் எந்த மொழியிலும் பார்க்கலாம் . அதற்காக அவர்கள் புதிய AI Model ஒன்றை பாவித்துள்ளார்களாம். ஆனால் அது என்ன மொடல் என்று வெளியிடவில்லை ஆனால் நமது உள்ளூர் மொழிக்கு ஏற்றது போல் Subtitle இன் மொழி மாறும் எனவும் அதற்காக Cloud - Online ற்கு செல்ல தேவையில்லை எனவும் ஆகவே இந்த மாற்றம் செய்வதற்கான வேலையை பார்த்துள்ளார்கள் என்றும் Las Vegas இல் நடைபெற்ற Electronic கண்காட்சியில் தெரிவித்துள்ளார்கள்.
What About the VLC?
இந்த VLC ஆனது ஒரு Open Source மென்பொருளாகும். இதைப்பாவிப்பதற்காக நாம் எந்த வித கட்டணங்களையும் இதுவரை செலுத்துவதே இல்லை . அத்துடன் இதற்குரிய License ம் இலவசமாகவே கிடைக்கின்றது. அப்படியாயின் இவர்கள் எப்படி இவ்வளவு பெரிய நிறுவனத்தை நடத்துகின்றார்கள் என கேள்வி ஒன்று உங்களுக்கு தோன்றும். கட்டாயம் தோன்றும். நீங்கள் அவர்களது இணையத்தளம் சென்றால் அங்கு வலது பக்க மேல் மூலையில் Donation எனும் Button ஒரு இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். அதுதான் அவர்களுடைய வருமானம் ஈட்டும் வழி .
Did You Donate ?
அது 4 யூரோவாக இருக்கலாம் அல்லது 5 டொலராக இருக்கலாம். உங்களுக்கு எந்த முறை இலகுவானதோ அதை பயன்படுத்தி நீங்கள் செலுத்தலாம்.நல்ல உள்ளங்கள் தான் அவர்கள். ஏனென்றால் உலகத்தில் அதிகமானவர்கள் இந்த VLC மென்பொருளை பாவிப்பதாக தரவு ஒன்று உள்ளது. அது Computer ஆக இருக்கலாம் அல்லது Mobile இருக்கலாம் எங்கும் இவை நிறுவப்பட்டிருக்கும். கடந்த வாரம் தங்களது Software 6 மில்லியன் Download ஐ தொட்டதாக அவர்களின் சமூக வலைப்பக்கதில் வெளியிட்டிருந்தார்கள்.
Source Code !
நீங்கள் சிறந்த மென்பொருள் பொறியிலாளராக இருந்தால் Software ற்குரிய Source Code ஆனது அவர்களது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள் நீங்கள் அதில் மாற்றம் செய்து பாவித்துக் கொள்ளலாம். சிறந்த முறையில் மாற்றம் செய்தால் அதை விற்பனை கூட நீங்கள் செய்யலாம். அதற்கு பூரண சுதந்திரத்தை அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
அத்துடன் GitHub இல் தங்களது Source Code ஐ பதிவேற்றம் செய்து வைத்துள்ளார்கள் அதை நீங்கள் Clone செய்து உங்களது IDE இல் பாவித்துக்கொள்ளலாம் or மாற்றம் செய்து கொள்ளலாம்.
Documentation is Available.
அத்துடன் அனைத்திற்கும் சரியான Documentation ஐ செய்து வைத்துள்ளார்கள் நீங்கள் கவலைப்படவே தேவையில்லை. நீங்கள் பாவிக்கும் போது ஏதாவது Bugs வந்தால் அதையும் அவர்களுக்கு அறிவிக்கலாம் இல்லையெனில் அதை தீர்த்து வைத்த பின்னர் கூட அவர்களுக்கு தெரிவிக்கலாம் அது சம்பந்தமான தெளிவுகளை கூட நீங்கள் அவர்களுக்கு அறிவிக்கலாம். அனைத்தையும் அவர்கள் வரவேற்கின்றார்கள். மற்றும் அவர்கள் எந்த எந்த 3 ம் நபர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளார்கள் எனவும் அவர்களிடம் எது சம்மந்தமான Plugins பாவிக்கின்றார்கள் எனவும் வெளியிட்டுள்ளார்கள்.
சில 3rd Parties Libraries
- liba 52
- AAC decoder
- libdca
- QT4 for GUI
- live Media
- matroska Open Standard Audio/ Video Container Format
- Live Media
அவர்களுடடைய GUI ஐ கூட மாற்றம் செய்து பாவிப்பதற்கு உங்களுக்கு அனுமதியுண்டு இனியென்ன அவர்களுடைய Web Page சென்று அங்கு உங்களுக்கு என்ன என்ன செய்ய வேண்டியுள்ளதோ அதை நீஙகள் பார்வையிட்டு மாற்றம் செய்யலாம்.